“முடிந்தால் பாராளுமன்றினுள் உள்ள குடு ராஜாக்களை காதினால் இழுத்து வெளியே தள்ளுங்கள்”

486

பாடசாலை மாணவர்களின் பைகளை அல்ல முடிந்தால் குடு ராஜா நிமல் லன்சாவை சிறையிடுங்கள் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதம செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்திருந்தார்.

அவர் தொடர்ந்தும் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்;

“.. எப்படிப்பட்ட நாடொன்று எமக்கு எஞ்சியுள்ளது? நினைத்துப் பாருங்கள். பாடசாலைகளுக்கு முன்னாக பொலிசாரினை நிறுத்தி, ஐஸ் இருக்குதா என்று மாணவர்களின் பைகளை பரிசோதனை இடுகின்றனர். ரணில் ராஜபக்ஷ அரசின் கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த கூறுகிறார், ஆசிரியர்களுக்கு ஐஸ் இனை இனங்காண பயிற்சி வழங்கவுள்ளாராம். அதுமட்டும் தான் இப்போதைக்கு குறைவு.

நாம் கூறுகிறோம், நீங்கள் எந்தப் பயிற்சியினை வழங்கினாலும், நீங்கள் எந்த நாடகத்தினை அரங்கேற்றினாலும், இந்த போதைப்பொருளை உங்களால் நிறுத்த முடியாது. இது ஒரு பொய், இது ஒரு மாயை, நாட்டு மக்களை திசை திருப்பும் செயல். சுசில் நுழைவாயில்களை மூடி பைகளை பரிசோதிக்க முன்னர் பாராளுமன்ற நுழைவாயில் அருகே சென்று, பாராளுமன்றினுள் உள்ள குடு வியாபாரிகளின் காதினை பிடித்து இழுத்து முடிந்தால் வெளியே தள்ளுங்கள். முடியாது, அது ஒருபோதும் முடியாது.

எங்கள் மாவட்டம் நீர்கொழும்பு, அங்குதான் குடு ராஜா இருக்கிறார். வேறு யாருமல்ல நிமல் லன்சா. முடிந்தால், அவனை காதினால் பிடித்து இழுத்து சிறையிடுங்கள்.

குடு கடத்தல் , மணல் கடத்தல், மனிதக் கடத்தல், எமது மக்களுக்கு வழங்கும் நஞ்சுள்ள உணவுப்பொருட்கள் ஆகியவற்றினை தடுக்க முடியுமான ஒரேயொரு பலம் எமது தேசிய மக்கள் சக்தி மட்டுமே. இந்த நாட்டினை அழிவுக்கு கொண்டு சென்றது நீங்கள் இரு தரப்பும் சேர்ந்து தான். எந்தளவு அழகான, இயற்கை அழகினை கொண்ட நாடு இது..” எனத் தெரிவித்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here