follow the truth

follow the truth

May, 17, 2024
HomeTOP2உலக கிண்ணத்தினை கைப்பற்றியது அர்ஜென்டினா

உலக கிண்ணத்தினை கைப்பற்றியது அர்ஜென்டினா

Published on

உலக கிண்ண கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் கத்தாரில் நடைபெற்றது. இதில் அர்ஜென்டினா, பிரான்ஸ் அணிகள் மோதின.

முதல் பாதியில் அர்ஜென் டினா 2-0 என முன்னிலை பெற்றது. 2வது பாதியில் பிரான்ஸ் அணி 2 கோல் அடித்ததால் ஆட்டம் சமனில் முடிந்தது.

கூடுதல் நேரத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்ததால் 3-3 என சமனிலை பெற்றன. இதையடுத்து பெனால்டி ஷூட் அவுட் முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணி பிரான்சை வீழ்த்தி உலக கிண்ணத்தினை 3வது முறையாக கைப்பற்றியது.

இந்நிலையில், உலக கிண்ண கால்பந்து சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றிய அர்ஜென்டினா அணிக்கு ரூ.342 கோடி பரிசு வழங்கப்படுகிறது.

இரண்டாவது இடம் பிடித்த பிரான்ஸ் அணிக்கு ரூ.244 கோடி பரிசாக அளிக்கப்படுகிறது.

இந்நிலையில், உலக கிண்ண கால்பந்து தொடரில் அதிக கோல்கள் அடித்து கோல்டன் ஷூ விருதை பிரான்ஸ் அணியின் கைலியன் எம்பாப்பே வென்றார். அர்ஜென்டினா அணியின் மெஸ்சி கோல்டன் பந்து விருதை வென்றார்.

LATEST NEWS

MORE ARTICLES

இஸ்ரேலுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் சென்ற தென்னாப்பிரிக்கா

ராஃபா எல்லையில் தஞ்சமடைந்துள்ள பலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியுள்ள நிலையில், இந்த தாக்குதலை நிறுத்த இஸ்ரேலுக்கு...

“கன்னத்தில் அறைந்தது உண்மைதான்” – பிரசன்ன ரணவீர

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகளின் பயணப் பொதிகளை ஏற்றிச் செல்லும் போர்ட்டர் ஒருவரை சிறு மற்றும் நடுத்தர தொழில்...

இலங்கையின் முதலாவது விளையாட்டு ஒம்புட்ஸ்மேன்

இலங்கையின் முதலாவது விளையாட்டு ஒம்புட்ஸ்மேன் டபிள்யூ. ஏ. சூலானந்த பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இலங்கை நிர்வாக சேவையில் (ஓய்வு பெற்றவர்)...