மேல் மாகாண பாடசாலைகளில் சிக்கும் ‘போதைப்பொருள்’

823

மேல்மாகாணத்தில் 223 பாடசாலைகளில் போதைப்பொருள் பாவனை இடம்பெறுவதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அந்தத் தகவலின் அடிப்படையில் மேல் மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தினால் ஒவ்வொரு பாடசாலைக்கும் ஒரு ஆசிரியர் வீதம் மூன்று நாள் போதைப்பொருள் தடுப்புப் பயிற்சித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தேசிய ஆபத்தான போதைப்பொருள் கட்டுப்பாட்டுச் சபை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் என்பன மேல் மாகாண கல்வி அமைச்சின் அனுமதியுடன் இத்திட்டத்தில் இணைந்துகொள்கின்றன.

நிகழ்ச்சியின் இறுதியில் பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் தலைமையில் சான்றிதழ்கள் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here