ஜோ பைடனுடன் ஜெலன்ஸ்கி சந்திப்பு

500

உக்ரைன் மீதான ரஷியாவின் போர் 10 மாதங்களாக நீடித்து வருகிறது.

உக்ரைனுக்கு அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும் அந்நாட்டுக்கு ஆயுதங்களையும் வழங்கி வருகின்றன.

இதற்கிடையே, உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி அமெரிக்காவுக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி இன்று அமெரிக்கா சென்றடைந்தார்.

வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி சந்தித்தார். இது நாடுகளிடையே பரஸ்பரம் நட்புறவு குறித்தும், ஆயுதங்கள், ராணுவ தளவாடங்களை வாங்குவது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என தெரிகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷியா போரை தொடங்கிய பிறகு ஜெலன்ஸ்கியின் முதல் வெளிநாட்டு பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here