follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுநாய் மீது பாலியல் துஷ்பிரயோகம் - விசாரணைகளை தொடங்குமாறு வேண்டுகோள்

நாய் மீது பாலியல் துஷ்பிரயோகம் – விசாரணைகளை தொடங்குமாறு வேண்டுகோள்

Published on

ஜனாதிபதியின் ஆலோசகர் ஒருவர் நாயை பாலியல் ரீதியில் துஸ்பிரயோகம் செய்தமை குறித்த குற்றச்சாட்டுகள் குறித்து இலங்கை அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என சர்வதேச விலங்குகள் உரிமை அமைப்பான பீட்டா (People for the Ethical Treatment of Animals ) வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஜனாதிபதியின் ஆலோசகருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து இலங்கை அரசாங்கம் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.

அவ்வாறான விடயம் இடம்பெற்றது உண்மை என்றால் இலங்கையின் சட்டங்களின் கீழ் தண்டனை வழங்கவேண்டும் என (PETA)பீட்டாவின் ஈவிரக்கமற்ற செயல் குறித்த விசாரணை பிரிவின் சிரேஸ்ட துணை தலைவர் டப்னா நச்சிவினோமிச் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் விலங்குகளை பாலியல் ரீதியில் துன்புறுத்துபவர்கள் பின்னர் மனிதர்களிற்கு எதிராக அவ்வாறான செயல்களில் ஈடுபடுவது அனேகமாக இடம்பெற்றுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் ஆலோசகர் நாயை துன்புறுத்தும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகியது.

இந்த வீடியோ வெளியான சில மணிநேரத்தில் ஜனாதிபதியின் ஆலோசகர் ஆஷு மாரசிங்க தனிப்பட்ட காரணங்களிற்காக தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

இந்த விடயங்களை செய்தியாளர் மாநாட்டில் அம்பலப்படுத்திய ஹிருணிகா பிரேமசந்திர ஆதர்ச கரந்தனா என்ற பெண்ணிண் செல்லப்பிராணிக்கே இந்த நிலை ஏற்பட்டது என தெரிவித்தார்.

செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த அந்த பெண் முகநூல் ஊடாக சந்தித்த பின்னர் மாரசிங்கவின் காதலியாக மாறி அவருடன் இரண்டு வருடம் ஒரே வீட்டில் வாழ்ந்ததாக தெரிவித்தார்.

நாயின் செயற்பாடுகளில் மாற்றத்தை அவதானித்த பின்னர் இரகசியமாக, ஜனாதிபதியின் குறித்த ஆலோசகர் நாயை பாலியல் துஷ்பிரயோகம் செய்யும் விடயத்தை பதிவு செய்ததாக அவர் தெரிவித்துள்ளார், என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...