follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுபொலிஸ் நிலைய அதிகாரிகள் 260 பேருக்கு இடமாற்றம்

பொலிஸ் நிலைய அதிகாரிகள் 260 பேருக்கு இடமாற்றம்

Published on

சுமார் 260 பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அந்த குழுவில் 50 பொலிஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 210 தலைமை பொலிஸ் இன்ஸ்பெக்டர்கள் உள்ளனர்.

இந்த இடமாற்றங்களில் சில பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் நிலைய கட்டளைத் தளபதிகளாக கடமையாற்றிய பொலிஸ் பரிசோதகர்கள் ஆகியோர் பொது கடமைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

2020-11-30 திகதியிட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல் இலக்கம் 2202/04 ஊடாக பொதுச் சேவை ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்படும் அதிகாரப் பிரதிநிதித்துவத்தின் பிரகாரம் பொலிஸ் நிலையத் தளபதிகளின் பதவிகளை நியமித்து இடமாற்றம் செய்வதற்கு பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடலோரப் பாதையில் ரயில் சேவைகள் தாமதம்

கடலோரப் பாதையில் ரயில் சேவைகள்  இன்று பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே  திணைக்களம்  தெரிவித்துள்ளது.  மொரட்டுவ மற்றும் பாணந்துறை இடையேயான தண்டவாளத்தில் ஏற்பட்ட...

தங்க விலையில் சற்றே குறைவு

இன்று (17) தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 1,000 ரூபாவால் குறைவடைந்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை...

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...