follow the truth

follow the truth

August, 23, 2025
Homeஉலகம்வெடிகுண்டு சூறாவளி : அமெரிக்காவில் பனிப்புயலுக்கு 18 பேர் பலி

வெடிகுண்டு சூறாவளி : அமெரிக்காவில் பனிப்புயலுக்கு 18 பேர் பலி

Published on

அமெரிக்காவில் வரலாறு காணாத வகையில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. வெடிகுண்டு சூறாவளி என்று அழைக்கப்படும் இந்த பனிப்புயல் பல மாகாணங்களை தாக்கி வருகிறது.

இதனால் தொடர்ந்து பனி கொட்டியபடியே இருக்கிறது. பனிப்புயலால் அமெரிக்காவில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் மலைபோல் பனி குவிந்து கிடக்கிறது. ரெயில் பாதைகள், விமான ஓடுபாதைகளில் பனி கொட்டிக்கிடக்கிறது.

இதனால் விமானங்கள், ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்படுகின்றன. பல இடங்களில் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்கள் ஏற்பட்டன. இதில் உயிரிழப்புகளும் உண்டாகி இருக்கிறது.

அமெரிக்காவில் சூறாவளி பனிப்புயலுக்கு 18 பேர் பலியாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடும் குளிரை தாங்காமல் மக்கள் அவதிப்படுகிறார்கள். தங்கள் வீடுகளில் நெருப்பு மூட்டி குளிர் காய்ந்தாலும் வெப்பநிலை மைனஸ் 45 டிகிரி வரை சென்றுள்ளதால் மக்கள் தவித்து வருகிறார்கள்.

மேலும் பல மாகாணங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. சுமார் 17 லட்சம் பேர் மின்சாரமின்றி இருளில் தவிக்கிறார்கள். கடும் பனிப்பொழிவால் வெளியில் செல்ல முடியாத சூழலில் வீட்டுக்குள் மின்சாரம் இல்லாமல் குளிரில் உறைந்து போய் கிடக்கிறார்கள்.

சாலைகள், மற்ற இடங்களில் கிடக்கும் பனிகளை அகற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. ஆனாலும் இடைவிடாத பனிப்பொழிவு இருப்பதால் தொடர்ந்து பனி குவிந்துகொண்டே இருக்கிறது. அமெரிக்காவில் பனிப்பொழிவு காரணமாக கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களையிழந்தது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ரஷியாவிடம் இருந்து...

உலகில் யாரிடமும் இல்லாத தனிப்பட்ட இரத்த வகை

கர்நாடகாவைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு உலகிலேயே யாரிடமும் இதுவரை பதிவாகாத புதிய வகை இரத்தம் இருப்பது தெரியவந்துள்ளது. இது மருத்துவத்...

கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுப்பது கடினம் – ட்ரம்ப்

பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக கனடா பிரதமர் அறிவித்ததையடுத்து, கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்லும் விஷயம் மிகவும் கடினமானதாக இருப்பதாக...