follow the truth

follow the truth

May, 21, 2025
Homeஉலகம்மாலைதீவு முன்னாள் ஜனாதிபதிக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை

மாலைதீவு முன்னாள் ஜனாதிபதிக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை

Published on

மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யாமீனுக்கு மாலைத்தீவு குற்றவியல் நீதிமன்றம் 11 ஆண்டுகள் சிறை தண்டனையும் 5 மில்லியன் டாலர் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

தனியார் நிறுவனமொன்றில் பணம் மோசடி செய்தமை தொடர்பான ஊழல் மற்றும் பணமோசடி குற்றச்சாட்டின் காரணமாக அவருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை யாமீன் மறுத்துள்ளார்.

அவர் 2018 இல் அதிகாரத்தை இழந்தார், ஆனால் 2023 இல் நடைபெறவுள்ள தேர்தலுக்கு மாலைத்தீவு முன்னேற்றக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

2019 இல், அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் $5 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டது.

இது ஒரு மில்லியன் டாலர் அரச நிதியை தவறாக பயன்படுத்தியது தொடர்பானது.

இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ள அவர் 2020ஆம் ஆண்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு சில மாதங்களுக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அரிசி வாங்குவது குறித்து சர்ச்சை கருத்து – ஜப்பானின் விவசாய அமைச்சர் இராஜினாமா

ஜப்பான் விவசாய அமைச்சர் டகு இடொ(Taku Eto), கடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், நான்...

கொலம்பியா விமானங்களுக்கு தடை விதித்த வெனிசுலா

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் கடந்த ஜூலை மாதம் அதிபர் தேர்தல் நடைபெற்றதில் நிகோலஸ் மதுரோ வெற்றி பெற்று...

இந்தியாவில் மீண்டும் தலை தூக்கியுள்ள கொரோனா – தற்போது 257 பேருக்கு உறுதி

பல ஆசிய நாடுகளில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில், இந்தியாவில் நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவே கூறப்படுகிறது. உலகையே...