மாலைதீவு முன்னாள் ஜனாதிபதிக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை

363

மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யாமீனுக்கு மாலைத்தீவு குற்றவியல் நீதிமன்றம் 11 ஆண்டுகள் சிறை தண்டனையும் 5 மில்லியன் டாலர் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

தனியார் நிறுவனமொன்றில் பணம் மோசடி செய்தமை தொடர்பான ஊழல் மற்றும் பணமோசடி குற்றச்சாட்டின் காரணமாக அவருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை யாமீன் மறுத்துள்ளார்.

அவர் 2018 இல் அதிகாரத்தை இழந்தார், ஆனால் 2023 இல் நடைபெறவுள்ள தேர்தலுக்கு மாலைத்தீவு முன்னேற்றக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

2019 இல், அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் $5 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டது.

இது ஒரு மில்லியன் டாலர் அரச நிதியை தவறாக பயன்படுத்தியது தொடர்பானது.

இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ள அவர் 2020ஆம் ஆண்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு சில மாதங்களுக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here