follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் 2 அரச வங்கிகளுக்கு 7,000 கோடி கடனை செலுத்தவில்லை

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் 2 அரச வங்கிகளுக்கு 7,000 கோடி கடனை செலுத்தவில்லை

Published on

இரண்டு அரச வங்கிகளில் இருந்து குறுகிய கால கடனாக பெறப்பட்ட 7,162.1 கோடி ரூபாவை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் செலுத்தவில்லை என தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது  என சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் திறைசேரி உத்தரவாதத்தின் அடிப்படையில் 2016/2017 ஆம் ஆண்டில் குறுகிய கால நிதித் தேவைகளுக்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் வசதிகளைப் பெற்றுள்ளது.

மேலும், 2017/2018 ஆம் ஆண்டில் இரண்டாவது முறையாக முந்தைய கடன் தொகையை செலுத்தாமல் 2,944 கோடி ரூபாய் கடன் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2020/2021 ஆம் ஆண்டில் இதே 02 அரச வங்கிகளிடம் மூன்றாவது தடவையாக 75 மில்லியன் அமெரிக்க டொலர் கடனாகப் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கையின்படி, மார்ச் 31, 2021க்குள், இரண்டு அரச வங்கிகளுக்காக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் 7,162.1 மில்லியன் ரூபாவை செலுத்த வேண்டும்.

தேசிய திறைசேரியின் உத்தரவாதத்தின் பேரில் இரண்டு அரச வங்கிகளில் இருந்து மூன்று தடவைகள் பெறப்பட்ட குறுகிய கால கடன் தொகை இன்னும் தீர்க்கப்படவில்லை என கணக்காய்வு அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...