follow the truth

follow the truth

May, 19, 2024
Homeவிளையாட்டுஅமினிக்கு ஆதரவளித்த கால்பந்து ஜாம்பவான் குடும்பத்தினரை வெளியேற்றியது ஈரான்

அமினிக்கு ஆதரவளித்த கால்பந்து ஜாம்பவான் குடும்பத்தினரை வெளியேற்றியது ஈரான்

Published on

மஹ்சா அமினியின் மரணத்தைத் தொடர்ந்து போராட்டங்களை ஆதரித்த ஈரானிய கால்பந்து ஜாம்பவான் அலி டெய், தனது குடும்பத்தினர் தெஹ்ரானில் இருந்து துபாய்க்கு வந்த விமானத்தை திருப்பியனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்திருந்தார்.

தெஹ்ரானில் பெண்களுக்கான கடுமையான ஆடைக் குறியீட்டை மீறியதற்காக கைது செய்யப்பட்ட பின்னர் செப்டம்பர் 16 அன்று 22 வயதான ஈரானிய-குர்திஷ் அமினி இறந்ததிலிருந்து ஈரானில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. தெஹ்ரான் பொதுவாக போராட்டங்களை “கலவரங்கள்” என்று குறிப்பிடுகிறது.

53 வயதான டெய், ஜெர்மனியின் Bundesliga strikerஆவார். கிறிஸ்டியானோ ரொனால்டோ சர்வதேச அளவில் 109 கோல்கள் அடித்து அவரை மிஞ்சும் வரையில் தனக்கான இடத்தினை தக்க வைத்துக் கொண்ட ஈரானின் மிகவும் பிரபலமான கால்பந்து வீரர்களில் ஒருவர்.

டெய், தனது மனைவியும் மகளும் தலைநகர் தெஹ்ரானில் உள்ள இமாம் கொமேனி விமான நிலையத்திலிருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள துபாய்க்கு மஹான் ஏர் விமானத்தில் பயணித்ததாக ISNA எனும் சர்வதேச செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆனால் விமானம் திசைதிருப்பப்பட்டு வளைகுடாவில் உள்ள ஈரானின் கிஷ் தீவில் தரையிறக்கப்பட்டது, அங்கு அவரது குடும்பத்தினர் வெளியேற்றப்பட்டனர் என்று அரச செய்தி நிறுவனமான IRNA தெரிவித்துள்ளது.

நீதிமன்றத்தை மேற்கோள்காட்டி, “இஸ்லாமிய புரட்சி மற்றும் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான குழுக்கள் மற்றும் வேலைநிறுத்தங்களின் அழைப்பைத் தொடர்ந்து, டெயின் மனைவி நாட்டை விட்டு வெளியேறும் முன் தனது முடிவை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிப்பதாக உறுதியளித்தார்” என IRNA செய்தி வெளியிட்டிருந்தது.

“விமானம் கிஷ் விமான நிலையத்தில் தரையிறங்கியது மற்றும் அலி டெயின்மனைவி மற்றும் மகள் விமானத்திலிருந்து இறங்கினர்” என IRNA செய்தியில் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

1998 ஆம் ஆண்டு அமெரிக்காவிற்கு எதிராக ஈரான் 2-1 உலகக் கிண்ணத்தினை வென்றதில் விளையாடிய முன்னாள் பயர்ன் முனிச் வீரர், அமினியின் மரணம் தொடர்பான போராட்டங்களை ஆதரித்த பின்னர் தனக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதாகக் கூறியுள்ளார்.

“எனது மகளும் மனைவியும் விமானத்திலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டனர், ஆனால் அவர்கள் கைது செய்யப்படவில்லை,” என்று டெய் கூறியதாக ISNA தெரிவித்துள்ளது.

“அவர்கள் தடை செய்யப்பட்டிருந்தால் (வெளியேற தடைகள்), அவர்கள் பாஸ்போர்ட் பொலிஸ் அமைப்பைக் காட்டியிருக்க வேண்டும்: இதைப் பற்றி யாரும் எனக்கு பதில் சொல்லவில்லை. இந்த விஷயங்களுக்கு என்ன காரணம் என்று எனக்குத் தெரியவில்லை”.

டெஹ்ரானுக்குத் திரும்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய அவரது குடும்பத்தினர் முயற்சிப்பதாக டெய் தெரிவித்துள்ளார்.

“அவர்கள் ஒரு தீவிரவாதியை கைது செய்ய விரும்பினார்களா? எனது மனைவியும் மகளும் துபாய்க்கு சென்று சில நாட்களாக திரும்பிக் கொண்டிருந்தனர்”, என்று அவர் மேலும் கூறினார்.

“அடக்குமுறை, வன்முறை மற்றும் கைதுகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக ஈரானிய மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க” அரசாங்கத்தை வலியுறுத்துவதற்காக செப்டம்பர் 27 அன்று டெய் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி இருந்தார்.

அவர் வெளிநாட்டிலிருந்து திரும்பிய சில நாட்களுக்குப் பிறகு அவரிடம் திருப்பித் தரப்படுவதற்கு முன்பு அவரது பாஸ்போர்ட் பொலிசாரால் பறிமுதல் செய்யப்பட்டதாக அக்டோபரில் டெய் AFP இடம் தெரிவித்திருந்தார்.

ஈரானிய அதிகாரிகளின் போராட்டங்களை ஒடுக்கியதால் தான் கத்தாரில் நடைபெறும் உலகக் கிண்ணத்திற்கு செல்லவில்லை என்று அவர் கூறினார்.

டிசம்பர் தொடக்கத்தில், தெஹ்ரானின் நாகரீகமான வடக்கில் உள்ள அவரது நகைக் கடை மற்றும் உணவகம் சீல் வைக்கப்பட்டது மற்றும் “சந்தை அமைதி மற்றும் வணிகத்தை சீர்குலைக்க சைபர்ஸ்பேஸில் எதிர்ப்புரட்சிக் குழுக்களுடன் ஒத்துழைத்ததற்காக அவற்றினை மூட உத்தரவிடப்பட்டதாக அந்நாட்டு உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

LATEST NEWS

MORE ARTICLES

2024 ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது சென்னை சூப்பர் கிங்ஸ்

17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் நேற்றைய போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸை 27 ஓட்டங்களால் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு...

2025 IPL – முதல் போட்டியில் விளையாட ஹர்திக் பாண்ட்யாவுக்கு தடை

2024 ஐ.பி.எல் தொடரில் மூன்று போட்டிகளில் மும்பை அணி மெதுவாக பந்து வீசியதற்காக மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவர்...

குசல் மெண்டிசின் விசா குறித்து இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிக்கை

இன்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், இலங்கை இருபதுக்கு 20 அணியின் உப தலைவர் குசல் மெண்டிஸ் அமெரிக்கா...