தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் அடுத்த வாரம் அறிவிக்கப்படும்

532

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தலை அடுத்த வாரம் வெளியிடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இன்று காலை தேர்தல்கள் ஆணைக்குழுவின் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் அங்கு கலந்துரையாடப்பட்டதாக மேற்படி ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.

பொலிஸ் மா அதிபர், தபால் மா அதிபர், அரசாங்க செய்தியாளர் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவரும் கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான விடயங்கள் தொடர்பில் அவர்களுடன் கலந்துரையாடியதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here