வாகன பதிவு கோப்பு 2 பக்கங்களாக குறைப்பு

527

வாகனப் பதிவுக்காகப் பயன்படுத்தப்படும் 11 பக்க சிக்கலான பதிவுக் கோப்பு இரண்டு பக்கங்களாகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும் புதிய பதிவுக் கோப்பு எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் பயன்படுத்தப்படும் எனவும் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்தார்.

மக்கள் இலகுவாக பயன்படுத்தக்கூடிய வகையில் ஆவணக் கோப்பின் சிக்கலான தன்மை குறித்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை கருத்திற்கொண்டு நாடு எதிர்நோக்கும் காகிதம் தொடர்பான பிரச்சினையை மையப்படுத்தி இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here