கொவிட் பற்றி சுகாதார துறை மீண்டும் எச்சரிக்கை

704

கொவிட்-19 இன் உலகளாவிய அபாயம் தொடர்பில் இலங்கை கவனம் செலுத்துவது முக்கியம் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொவிட் அபாயத்தைத் தவிர்ப்பதற்கு முறையான சுகாதார மற்றும் பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றுவதற்கு மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.

சீனாவில் கொவிட் பரவல் அதிகரித்துள்ள நிலையில், தற்போது பல நாடுகள் கொவிட் நோயைக் கட்டுப்படுத்த மீண்டும் நிபந்தனைகளை விதிக்க நடவடிக்கை எடுத்துள்ளன.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து மேலும் விளக்கமளிக்கும் கலாநிதி ஹேமந்த ஹேரத்,

“நோய் நமக்கு ஒரு பெரிய பிரச்சினையாகத் தெரியவில்லை என்றாலும், நோய் தீரவில்லை என்பதால், நோய் மீண்டும் வரும் அபாயம் முற்றாக நீங்கவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதைத் தவிர்க்க நாம் செய்யக்கூடிய சிறந்த விஷயம், அதே ஆரோக்கிய பழக்கங்களைச் செய்வதுதான்.”

இலங்கையில் நாளாந்தம் சுமார் 10 கொவிட் நோயாளிகள் பதிவாகுவதாகவும், ஆனால் சந்தேகத்திற்குரிய அனைத்து நோயாளிகளையும் பரிசோதிக்காததால், சமூகத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நோயாளிகள் இருக்கலாம் என்றும் வைத்தியர் ஹேமந்த ஹேரத் கூறினார்.

முறையான சுகாதார ஆலோசனைகளை பின்பற்றுவதன் மூலம் இன்றைய நாட்களில் பரவி வரும் இன்புளுவன்சா போன்ற நோய்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும் என சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here