சேபால அமரசிங்கவுக்கு எதிராக நடவடிக்கை

868

யூடியூபர் சேபால் அமரசிங்கவுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துவதாக நீதியமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ தலதா வஹன்சே (பௌத்தர்களின் புனிதம்) அவமதிக்கும் வகையில் வெளியிடப்பட்ட கருத்து தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு உரையாற்றிய நீதியமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான விஜயதாச ராஜபக்ஷ;

“ஸ்ரீ தலதா வஹன்சே என்பது இலங்கையர்களுக்கு மாத்திரமல்ல, முழு உலக பௌத்த மக்களின் அடையாளமாகும், எனவே அதனை அவமதிக்க இவ்வுலகில் எவருக்கும் உரிமை இல்லை. கடந்த சில நாட்களுக்கு முன்னர் சேபால் அமரசிங்க மிகவும் வெட்கக்கேடான வகையில் ஸ்ரீ தலதா வஹன்சே இனை
சமூக ஊடகங்களினூடாக அவமானப்படுத்தினார். இன்று கௌரவ மகா சங்கரத்தினரும் பௌத்த மக்களாகிய நாமும் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். இந்நாட்டின் அரசியலமைப்பின் பிரகாரம் சட்ட விதி 290 கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். இது 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கக்கூடிய குற்றமாகும். இந்த நாட்டில் மத மோதலை ஏற்படுத்த முயலும் இவருக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துவோம் என அரசாங்கம் என்ற ரீதியில் தெளிவாக கூறுகின்றோம்..”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here