சீனாவிலும் பல நாடுகளிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை கருத்தில் கொண்டு இலங்கைக்கு பயணிக்கும் நபர்கள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தி ஊடகப் பேச்சாளர் கலாநிதி சாமில் விஜேசிங்க, தொழில்நுட்ப மற்றும் விஞ்ஞான அடிப்படையில் முடிவுகளை எடுப்பதற்கு COVID-19 தொழில்நுட்பக் குழு ஒன்று கூட வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.
கொவிட் 19 மீண்டும் பரவத் தொடங்கினால், தற்போது பல நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள நாடு, அதன் தாக்கத்தை தாங்க முடியாது என்று டாக்டர் விஜேசிங்க கூறினார்.
இதற்கிடையில், தொற்று நோய்கள் மருத்துவமனையின் ஆலோசகர் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம, கொவிட் 19 அறிகுறிகள் மாறியிருப்பதில் உண்மையில்லை என்று கூறினார், மேலும் நாட்டில் புதிய மாறுபாடுகள் தோன்றவில்லை என்றும் கூறினார்.
எவ்வாறாயினும், சாத்தியமான தொற்றுநோய்களைத் தடுக்க நல்ல சுகாதார நடைமுறைகளைத் தொடர வேண்டும் என்று வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம மேலும் குறிப்பிட்டிருந்தார்.