இலங்கை பணம் அச்சிடுவதை சர்வதேச நாணய நிதியம் தடை செய்துள்ளது

1097

இலங்கை தொடர்ந்தும் பணம் அச்சிடுவதை சர்வதேச நாணய நிதியம் தடை செய்துள்ளதாக என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகும் நாங்கள் தொடர்ந்து பணத்தை அச்சடித்து கடன் வாங்கி வருவதால்தான், எங்களால் கடனை அடைக்க முடியாமல், கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இப்போது நாம் கடனாளிகளுக்கு அந்தக் கடன்களை செலுத்தாத காரணத்தால் சர்வதேச நாணய நிதியம் மற்றும் பிற கடன் வழங்கும் நிறுவனங்களால் பணம் அச்சிடுவதை தடை செய்துள்ளனர். பணத்தை வடிவமைக்க அனுமதி இல்லை. அந்தச் சூழ்நிலையில்தான் நாட்டின் நிதியை நிர்வகிக்க வேண்டும்..”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here