follow the truth

follow the truth

May, 15, 2024
HomeTOP1மைத்திரியின் முன்னாள் தலைமை அதிகாரியின் தண்டனை உறுதியானது

மைத்திரியின் முன்னாள் தலைமை அதிகாரியின் தண்டனை உறுதியானது

Published on

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னாள் தலைமை அதிகாரி குசும்தாச மஹாநாம மற்றும் அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பியதாச திஸாநாயக்க ஆகியோருக்கு கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை உச்ச நீதிமன்றம் இன்று (11) உறுதி செய்துள்ளது.

2018 மே மாதம், இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, பிரதிவாதிகளான குசும்தாச மஹாநாம மற்றும் பியதாச திஸாநாயக்க ஆகியோருக்கு எதிராக 24 குற்றச்சாட்டுகளின் கீழ் கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் வழக்குத் தாக்கல் செய்தது.

அந்தக் குற்றச்சாட்டுக்களில் குற்றவாளியாகக் காணப்பட்ட குசும்தாச மஹாநாமவுக்கு 20 வருட கடூழியச் சிறைத்தண்டனையும், 65,000 ரூபா அபராதமும் விதித்து மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்தது.

அத்துடன், குற்றம் சாட்டப்பட்ட பியதாச திஸாநாயக்கவுக்கு 12 வருட கடூழியச் சிறைத்தண்டனையும், 50,000 ரூபா அபராதமும் விதித்து கொழும்பு மேல் நீதிமன்ற மூவரடங்கிய நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

ஆள் கடத்தலுக்கு எதிராக தராதரம் பாராமல் சட்டம் அமுல்படுத்தப்படும்

ஆள் கடத்தலில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக தராதரம் பாராமல் சட்டத்தின் மூலம் அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் என பாதுகாப்பு...

கடந்த 2 வருடங்களில் 75 புதிய சட்டங்கள்

கடந்த 2 வருடங்களில் மாத்திரம் 75 புதிய சட்டங்களை அரசாங்கம் நிறைவேற்றியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அதன்படி, தெற்காசியாவில்...

விஜயதாசவுக்கான தடையுத்தரவு நீடிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராகவும் பதில் பொதுச் செயலாளராகவும் தெரிவு செய்யப்பட்ட நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மற்றும்...