follow the truth

follow the truth

July, 7, 2025
Homeவிளையாட்டுமிக்கி ஆர்தர் பாகிஸ்தான் செல்லத் தயக்கம்

மிக்கி ஆர்தர் பாகிஸ்தான் செல்லத் தயக்கம்

Published on

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆர்தர், பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்பாளராக இணைவதற்கு தயக்கத்தை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாகிஸ்தான் கிரிக்கெட்டில் தற்போது நிலவும் நிலையற்ற தன்மையை கருத்தில் கொண்டு அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, அவர் தற்போது பயிற்சியாளராக இருக்கும் இங்கிலாந்து டெர்பிஷயர் மாநில அணிக்கு தொடர்ந்து பயிற்சியளிப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த மிக்கி ஆர்தர் 2016 முதல் 2019 வரை பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பணியாற்றினார், அந்த நேரத்தில் அவர் பாகிஸ்தான் ஐசிசி. சாம்பியன்ஸ் கிண்ணத்தினை வென்ற வீரர்களுடன், டி20 தரவரிசையிலும் முன்னிலையை தக்கவைத்துக் கொண்டனர்.

பின்னர் 2020 முதல் 2021 வரை இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக பணியாற்றினார். டெர்பிஷயர் கவுண்டி அணியின் பயிற்சியாளராக பணியாற்றிய மிக்கி ஆர்தர், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய தலைவர் நஜாம் சேத்தி நியமிக்கப்பட்ட பிறகு, அந்த அணியின் பயிற்சியாளர் பதவிக்கு சமீபத்தில் அழைக்கப்பட்டார். ஆனால் தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட்டில் நிலவும் அதிகாரப் போட்டி காரணமாக இந்த அழைப்பிற்கு மிக்கி ஆர்தர் தனது மறுப்பு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட முடிவு

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இன்று (5) பகலிரவு...

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியிடம் தோல்வியடைந்த இலங்கை ரக்பி அணி

கொழும்பு ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் இன்று(04) நடைபெற்ற ஆசிய ரக்பி ஆண்கள் சாம்பியன்ஷிப் (Asia Rugby Emirates Men’s Championship...

போர்ச்சுகல் வீரர் டியோகோ ஜோட்டா மற்றும் சகோதரர் கார் விபத்தில் உயிரிழப்பு

போர்ச்சுகல் கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா மற்றும் அவரது சகோதரரும் ஸ்பெயினில் உள்ள ஜமோரா அருகே நடந்த கார்...