ஜனாதிபதியின் தைப் பொங்கல் வாழ்த்து செய்தி

278

தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட வாழ்த்துச்செய்தி ஒன்றினை விடுத்துள்ளார்.

சூரியன், இயற்கை அன்னை மற்றும் பண்ணை விலங்குகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கொண்டாடப்படும் ‘தைப் பொங்கல்’ என்ற புனிதமான சந்தர்ப்பத்தில், இலங்கையின் இந்து பக்தர்களுக்கு எனது நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த ‘தைப் பொங்கல்’ என்பது கூடுதல் முக்கியத்துவத்துடன் கூடிய கொண்டாட்டமாகும்.

நம் முன்னோர்களால் நிறுவப்பட்ட இலங்கையை கிழக்கின் தானியக் களஞ்சியமாக புதுப்பித்து, அனைவருக்கும் உணவுப் பாதுகாப்பையும், போஷாக்கையும் உறுதி செய்து தன்னிறைவு பெற்ற நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளை அடையாளப்படுத்துவதற்கு இந்த ஆண்டு ‘பொங்கல்’ பண்டிகை உகந்ததாகும். விவசாயத் துறையை நவீனமயமாக்குவது, அதை பயனுள்ள, நிலையான மற்றும் இலாபகரமான வாழ்வாதாரமாக உருவாக்குவதற்கும், போட்டித்தன்மையுள்ள சர்வதேச சந்தைகளுக்கு சேவை செய்வதற்கும் அரசாங்கத்தின் முயற்சியில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

உற்பத்தித்திறன் மற்றும் செழுமையையும் குறிக்கும் இந்த ‘தைப் பொங்கல்’ தினத்தில், இலங்கையர்களாகிய நாம் அரசாங்கத்தின் புதிய பொருளாதார மற்றும் சமூக சீர்திருத்த வேலைத்திட்டத்திற்கு பங்களிக்கவும், பொருளாதார வளத்துடன் நாட்டை மீளக் கட்டியெழுப்பவும் ஒன்றிணைந்து அர்ப்பணிப்புடன் செயற்படுவது மிகவும் அவசியமாகும். ‘தைப் பொங்கல்’ கொண்டாட்டம், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை நோக்கிய பயணத்திற்கு ஆசீர்வாதங்களை வழங்கட்டும். ‘பொங்கலின்’ ஆவி மற்றும் மரபுகளுக்கு அமைவாக, இலங்கை மக்கள் செழிக்க வெற்றி நிரம்பி வழியட்டும்.

ரணில் விக்கிரமசிங்க
ஜனாதிபதி
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here