இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 46ஆவது போட்டியில் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி 04 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட்டுக்களை இழந்து 129 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அணிசார்பில் அதிகபடியாக சூர்யகுமார் யாதவ் 33 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இந்நிலையில், 130 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி 19.1 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
அணிசார்பில் அதிகபடியாக ஸ்ரேயாஷ் ஐயர் 33 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.