follow the truth

follow the truth

May, 5, 2025
HomeTOP3"ஈஸ்டர் தாக்குதலை விட என்னை பாதித்த சம்பவம் வேறெதுவும் இல்லை"

“ஈஸ்டர் தாக்குதலை விட என்னை பாதித்த சம்பவம் வேறெதுவும் இல்லை”

Published on

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கதெனவும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் பொறுப்புகளை தெளிவுபடுத்தியமைக்கு தாம் குறிப்பாக பாராட்டுக்களைத் தெரிவிப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

எதிர்கால அமைச்சர்கள் மற்றும் ஜனாதிபதிகளின் ஒழுங்குமுறை செயல்பாடுகள் மற்றும் நிறைவேற்று அதிகாரங்கள் தொடர்பாக இந்த தீர்ப்பு உறுதியான நிலைப்பாட்டை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலைப் போன்றதொரு நான் பாதித்த தாக்குதல் எனது வாழ்க்கையிலேயே நான் காணவில்லை என்றும், அந்த தாக்குதல்களின் சமூக-பொருளாதார அரசியல் மற்றும் சட்டரீதியான விளைவுகளால் தான் மேலும் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

தான் இலங்கையின் ஜனாதிபதியாகவும், பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்தபோது இந்த துரதிஷ்டவசமான தாக்குதல் இடம்பெற்றமை குறித்து வருத்தம் தெரிவிக்க வார்த்தைகள் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பாதுகாப்பு அமைச்சராகவோ அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியாகவோ இந்த தாக்குதல் தொடர்பான எந்தத் தகவலும் எனக்கு தெரிவிக்கப்படவில்லை என்றும், இது உச்ச நீதிமன்றத் தீர்ப்பிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு

தேர்தல் பிரச்சார அமைதி காலம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது. இதன்படி, உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து...

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை

காஷ்மீர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய 06 பேர் சென்னையிலிருந்து வந்த விமானத்தில் இருப்பதாக இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமைய...

டேன் பிரியசாத் கொலை – துப்பாக்கிதாரியை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

டேன் பிரியசாத் கொலை சம்பவத்தின் துப்பாக்கிதாரி என சந்தேகத்தின் பேரில் நேற்று (2) கைது செய்யப்பட்ட நபரை தடுத்து...