follow the truth

follow the truth

May, 10, 2025
Homeஉள்நாடுபல்கலைக்கழக மாணவி கொலை : மாணவன் மனநல அறிக்கையை சமர்ப்பிக்க கோரிக்கை

பல்கலைக்கழக மாணவி கொலை : மாணவன் மனநல அறிக்கையை சமர்ப்பிக்க கோரிக்கை

Published on

கொழும்பு ரேஸ்கோர்ஸ் பகுதியில் பல்கலைக்கழக மாணவியான தனது காதலியை கத்தியால் குத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட பல்கலைக்கழக இளைஞன் குறித்த மனநல அறிக்கையை கோருமாறு கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகநபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதவான், அவரது மன நிலை குறித்து பரிசோதிக்க அவரை தேசிய மனநல நிறுவகத்தின் விசேட வைத்தியரிடம் அனுப்புமாறு உத்தரவிட்டதுடன், சிறைச்சாலை அத்தியட்சகருக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டார்.

குருந்துவத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சத்துரங்க டி சில்வா, பிரதான நீதவான் அலுவலகத்தில் ஆஜர்படுத்தப்பட்டதுடன், சம்பவம் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றத்தைக் காட்டும் மேலதிக அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டது.

ஹோமாகம கிரிவத்துடுவ புபுது உயனவில் வசிக்கும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தின் மூன்றாம் வருடத்தில் கல்வி கற்கும் சதுரி ஹன்சிகா மல்லிகாராச்சி என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

இணைப்புச் செய்திகள்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – ஆசிரியருக்குக் கட்டாய விடுமுறை

கொட்டாஞ்சேனையில் 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான ஆசிரியர் கட்டாய...

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குலான ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் பழுதடைந்ததால் கடலோர மார்க்கம் ஊடான...

ஜனாதிபதி அலுவலகத்தின் அதிசொகுசு வாகன ஏலத்தின் 2ம் கட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின்...