“நீதிபதிகளின் செயற்பாடுகளில் நான் தலையிட முடியாது”

259

நீதிபதிகளின் செயற்பாடுகளில் தலையிட முடியாது என நீதித்துறை சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ இன்று (19) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பெண் நீதிபதி ஒருவர் சந்தேக நபருக்கு உணவு அருந்துவதற்காக 10,000 ரூபா வழங்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் குழு வினவியபோதே நீதி அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டார்.

“நீதிபதிகளின் ஒழுக்கம் மீதான கட்டுப்பாட்டை நீதிச் சேவை ஆணைக்குழு கொண்டுள்ளது. தலைமை நீதிபதிதான் ஆணையத்தின் தலைவர். அமைச்சர்களின் கேள்விகளை ஆணையத்திற்கு அனுப்பிவிட்டு பதில்களை பின்னர் தருகிறேன்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here