follow the truth

follow the truth

May, 22, 2024
Homeபொலிட்டிக்கல் மேனியாஇன்னும் சில அமைச்சர் பதவிகள் விரைவில்

இன்னும் சில அமைச்சர் பதவிகள் விரைவில்

Published on

இன்னும் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் நாட்களில் அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளதாக அரசாங்கத்தின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் இந்தக் குழுவில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான வஜிர அபேவர்தன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் துமிந்த திஸாநாயக்க மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்து கொள்வார்கள் என அரச வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த அமைச்சுப் பிரமாணத்தில் துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள், விளையாட்டு, போக்குவரத்து, தொழில், மின்சாரம், ஊடகம், முதலீட்டு ஊக்குவிப்பு, உள்நாட்டலுவல்கள் ஆகிய அமைச்சுப் பதவிகள் மாறலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, தற்போது அமைச்சரவையை பிரதிநிதித்துவப்படுத்தும் பல அமைச்சர்கள் மாற்றங்கள் மற்றும் இராஜினாமாவுக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.

LATEST NEWS

MORE ARTICLES

இருபது எம்.பி.க்களுக்கு நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலை உணவுகள் ருசி இல்லையாம்

நாடாளுமன்றத்தின் சிற்றுண்டிச்சாலையில் வழங்கப்படும் உணவு தரமற்றதாக இருப்பதாக எம்பிக்கள் குழு சபாநாயகரிடம் முறைப்பாடு அளித்துள்ளது. கடந்த 10ம் திகதி நடந்த...

சஜித் – அநுர விவாதம் நடைபெறும் திகதி தொடர்பிலான அறிவிப்பு

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி இடையே முன்மொழியப்பட்ட விவாதங்களுக்கான திகதிகளை பரிந்துரைத்து ஐக்கிய மக்கள்...

பாராளுமன்றம் ஜூனில் கலைக்கப்படும்

நிச்சயம் பொதுத் தேர்தல் தான் வரும் ஜனாதிபதி தேர்தல் அல்ல எனவும் எதிர்வரும் 14 அல்லது 15ஆம் திகதிகளில்...