follow the truth

follow the truth

May, 4, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியா"ரணில் ராஜபக்ஷ மருந்துகள் இனியும் வேண்டாம்"

“ரணில் ராஜபக்ஷ மருந்துகள் இனியும் வேண்டாம்”

Published on

உள்ளூராட்சி தேர்தலில் முழுமையாக தேசிய மக்கள் சக்தி அமோக வெற்றியினை பெரும் என தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சமந்த வித்யாரத்ன தெரிவித்திருந்தார்.

“.. தேசிய மக்கள் சக்தி சார்பில் பதுளை மாவட்டத்தில் வேட்புமனுக்களை நாம் தாக்கல் செய்தோம். உள்ளூராட்சி மன்றங்கள் 18 உள்ளன. அதில் 14 இற்கு வேட்புமனுக்களை தாக்கல் செய்தோம். நாம் அமோக வெற்றியினை பெறுவோம் என நம்புகிறோம். ஏனென்றால் ஏனைய கட்சிகளுக்கு தேர்தலில் நிற்கவே ஆளில்லை. அவர்கள் இன்னும் தேடுகிறார்கள். எங்களுக்கு நல்லதொரு வேட்பாளர்கள் குழு உள்ளது.

துஷ்டமான ஆட்சியினை கவிழ்க்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. நாம் உள்ளூராட்சி மன்றங்களை ஒட்டுமொத்தமாக கைப்பற்றுவோம். அரசாங்கம் இப்போதே தோல்வியினை கண்டு அஞ்சி விட்டார்கள். பலவிதமான முயற்சிகளையும் மேற்கொண்டார்கள் இறுதியில் எதுவுமே கைகூடவில்லை. எப்படியிருந்தாலும் நாம் அரசுக்கு சொல்வது வெள்ளைக் கொடிகளை தயார்படுத்திக் கொள்ளுங்கள். 75 வருட துஷ்டமான அரசியலை முடிவுக்கு கொண்டுவந்து ஜனநாயக ஆட்சி முறையைக் கொண்டு வருவோம். வீழ்ந்துள்ள எங்கள் தாய்நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவோம்..”

இதன்போது ‘உங்களுக்கு மருந்து தேவையா? தேர்தல் தேவையா?’ என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பி இருந்தார்.

அதற்கு பதிலளிக்கையில்; “இதுவரை காலமும் ரணிலின் மருந்துகளையும் ராஜபக்சர்களின் மருந்துகளையும் உண்டோம். இனியும் போலி வைத்தியர்களின் போலி மருந்துகள் வேண்டாம் ..” எனவும் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு...

மே மாதம் முதல், ஆசிரியர்களுக்கான நவீன கல்விக்கான பயிற்சிகள் ஆரம்பமாகும்

புதிய கல்வி சீர்திருத்தங்களுக்குத் தேவையான ஆசிரியர்களுக்கான பயிற்சி மே மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என்றும், எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலுக்குப்...

பிள்ளைகளை பாடசாலைகளுக்கு சேர்க்கும் போது அநீதிகள் நடந்தால், அமைச்சுக்கு அறிவியுங்கள்

பிள்ளைகளை பாடசாலைகளுக்கு சேர்க்கும் போது அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் மற்றும் அதிபர்கள் நன்மையடைந்த காலம் முடிவடைந்துவிட்டது. அப்படி அநீதிகள்...