இலங்கை கால்பந்து சம்மேளனத்தை FIFA தடை செய்தது

1509

கால்பந்தின் உயர்மட்ட உலக அதிகாரசபையான FIFA, இலங்கை கால்பந்து சம்மேளனத்தை (FFSL) மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தியுள்ளது.

“எனவே FFSL பிரதிநிதி மற்றும் கிளப் அணிகளுக்கு தடை நீக்கப்படும் வரை சர்வதேச போட்டிகளில் பங்கேற்க உரிமை இல்லை” என்று FIFA அனைத்து உறுப்பினர் சங்கங்களுக்கும் எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளது.

FIFA அதன் அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் அதன் துணை நிறுவனங்களுக்கும் “FFSL அல்லது அதன் எந்த அணிகளுடன் எந்த விளையாட்டு ஒப்பந்தத்திலும் ஈடுபட வேண்டாம்” என்று அறிவுறுத்தியுள்ளது.

அடுத்த FIFA காங்கிரஸுக்கு முன் இடைநீக்கம் நீக்கப்படலாம் என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here