வைத்தியர் ஷாபியின் மனு குறித்து நீதிமன்ற உத்தரவு

1494

குருநாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன், பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டமை சட்டவிரோதமானது எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை மனித உரிமைகள் மனுவை எதிர்வரும் மே மாதம் 16ஆம் திகதி கூடி பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரியந்த ஜயவர்தன, எஸ்.துரைராஜா மற்றும் குமுதுனி விக்கிரமசிங்க ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இந்த மனு இன்று (25) பரிசீலனைக்கு அழைக்கப்பட்டது.

இந்த மனுவை வரும் 16ம் திகதி பரிசீலிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மலட்டுத்தன்மைக்கு அறுவை சிகிச்சை மற்றும் பணமோசடி குற்றச்சாட்டின் பேரில் டாக்டர் ஷாபி கைது செய்யப்பட்டதாக பொலிசார் அறிவித்திருந்தனர்.

எவ்வாறாயினும், தம்மைக் கைது செய்தமைக்கான நியாயமான காரணத்தை பொலிஸார் தெரிவிக்கவில்லை என சுட்டிக்காட்டியுள்ள மனுதாரர் வைத்தியர், பொய்யான மற்றும் ஆதாரமற்ற உண்மைகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதன் மூலம் தனது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்குமாறு கோரியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here