நாட்டின் நிதி நிலைமையைக் கருத்தில்கொண்டு யோசனைகளை முன்வைக்கவும்

679

உயர்தரப் பரீட்சையின் போது மின்சாரத்தை துண்டிக்க வேண்டாம் என கல்வி அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் ஆனால் நாட்டின் நிதி நிலைமை பாதிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அதன்படி பரீட்சை நேரத்தில் கூட மின்வெட்டை தடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த காலப்பகுதிக்கான தொடர்ச்சியான மின்சாரம் வழங்கப்படுவதற்கு மேலதிகமாக 5 பில்லியன் ரூபா செலவாகும் என எண்ணெய் கூட்டுத்தாபனம் மின்சார சபைக்கு அறிவித்துள்ளதாகவும், அத்தொகையை செலுத்துவதற்கு சபைக்கு நிதி பலம் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

பணத்தை செலுத்தாமல் எரிபொருளை கடனாகப் பெற்றால் அது எரிபொருள் வரிசையில் நிற்கும் இன்னொரு யுகத்திற்கு வழிவகுக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.

தொடர்ந்து 24 மணி நேரமும் மின்சாரம் வழங்கும் வகையில் கட்டணத்தை உயர்த்துவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், மீண்டும் வரிசைகள் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் திருத்தத்தை அனுமதிக்குமாறு கோரிக்கை விடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here