பொருளாதார பிரச்சினைகளால் நாட்டில் மன நோயாளிகள் அதிகரிப்பு

632

பொருளாதார பிரச்சினைகளால் ஏற்பட்ட அழுத்தங்களினால் மனநோயாளிகளாக மாறியவர்களின் எண்ணிக்கை 30 வீதத்தால் அதிகரித்துள்ளதாக காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் விசேட மனநல மருத்துவர் ரூமி ரூபன் தெரிவித்துள்ளார்.

பல்வேறு மனநோய்களுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்கள் பொருளாதார பிரச்சினைகளால் மருந்துகளை உட்கொள்வதை நிறுத்தியதால் மீண்டும் மனநோய்கள் அதிகரித்து வைத்தியசாலையில் அனுமதிப்பவர்கள் அதிகரித்துள்ளதாக நிபுணர் வைத்தியர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நாட்டில் தங்குவதற்கு எதிர்காலம் இல்லை என விரக்தியடைந்த இளைஞர்கள் மத்தியில் மனநோய்கள் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாடு செல்ல முடியாமல் மன உளைச்சலுக்கு உள்ளாகும் இளைஞர்களிடையே மனநலப் பிரச்சினைகள் அதிகம் உருவாகியுள்ளதாகவும், சமூகத்தின் மீதான வெறுப்பை வெளியிட்டு பல இளைஞர்கள் இந்த அழுத்தத்தை போக்குவதாகவும் கூறினார்.

வைத்தியர் ரூமி ரூபன் மேலும் கூறுகையில், பலர் தங்கள் வெறுப்பை வெளிப்படுத்த சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகின்றனர்.

பொருளாதார பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை மன உளைச்சல் வெகுவாக அதிகரித்துள்ளதாக தெரிவித்த நிபுணர் வைத்தியர், கல்வி நடவடிக்கைகளை குறித்த நேரத்தில் முடிக்க முடியாமல் கணிசமானோர் மன உளைச்சலுக்கு ஆளாவதாக குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா காலத்தில் ஆன்லைன் கல்வியின் காரணமாக மொபைல் போன்களுக்கு அடிமையான ஏராளமான குழந்தைகளும் பல்வேறு மனநல கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் வெளிப்படுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here