follow the truth

follow the truth

May, 21, 2024
Homeஉள்நாடுமின்துண்டிப்பினை நிறுத்த முடியாது - மின்சார சபை

மின்துண்டிப்பினை நிறுத்த முடியாது – மின்சார சபை

Published on

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்வெட்டுக்கு அனுமதி வழங்காவிட்டாலும் மின்வெட்டை தொடர வேண்டிய நிலை ஏற்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

உயர்தரப் பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் மின்வெட்டுகளை இடைநிறுத்த முடியாது என அதன் தலைவர் நளிந்த இளங்ககோன் தெரிவித்துள்ளார்.

அக்காலப்பகுதியில் மின்வெட்டு ஏற்படுவதை தவிர்ப்பதற்காக எரிபொருள் கொள்வனவு செய்வதற்கு நான்கு பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான தொகை தேவைப்படுவதாகவும் தலைவர் தெரிவித்தார்.

மின்வெட்டு இடைநிறுத்தப்படும் என இலங்கை மின்சார சபை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

எரிபொருளின்றி மின்சாரம் வழங்க முடியாது எனவும், எரிபொருளை வழங்குவதற்கு எண்ணெய் கூட்டுத்தாபனம் இணங்கினால் எரிபொருள் வழங்கப்பட வேண்டும் எனவும், அது தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்க வேண்டும் எனவும் அவர் கூறுகிறார்.

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளம் மாவட்ட பாடசாலைகளுக்கான அறிவிப்பு

வடமேல் மாகாணத்தின் புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (22) மீண்டும் திறக்கப்படும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாக...

எக்ஸ்பிரஸ் பேர்ள் விபத்து நடந்து 3 வருடங்கள்

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்துக்குள்ளாகி இன்றுடன் (21) மூன்று வருடங்கள் பூர்த்தியாகின்றன. இதனால் வாழ்வாதாரத்தை பெற முடியாத நிலையில் உள்ள...

விஜயதாசவின் மனு மீண்டும் விசாரணைக்கு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக விஜயதாச ராஜபக்ஷவையும் பதில் செயலாளராக கீர்த்தி உடவத்தவையும் நியமித்தது சட்டவிரோதமானது என நாடாளுமன்ற...