மின்சார சபை சட்ட நடவடிக்கையினை எதிர்கொள்ள நேரிடும்

473

பொறுப்பான அமைச்சரின் தன்னிச்சையான நடவடிக்கையினால் தொடர் மின்சார விநியோகத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது குறித்து அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க கருத்ஹ்டுத் தெரிவிக்கையில்; இலங்கை மின்சார சபை இணக்கப்பாட்டுக்கு அமைய தொடர்ச்சியான மின்சார விநியோகத்தை வழங்க தவறினால், மின்சார சபை சட்டத்தின் முன் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

“அமைச்சரின் தன்னிச்சையான நடவடிக்கையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. திங்கட்கிழமைக்குள் இந்நிலையை மாற்ற வேண்டும்.. வழங்கிய உத்தரவின் அடிப்படையில் மின்சாரம் வழங்க வேண்டும். இவ்வாறு செய்யாவிட்டால் மின்சார சபையை கண்டிப்பாக சட்டத்தின் முன் நிறுத்துவோம்.

அமைச்சரவை மின் கட்டண திருத்தத்தை நிராகரித்தோம். இது மின்சார சட்டத்தின் விதிகளுக்கு இணங்கவில்லை. 11 விடயங்கள் குறித்து சட்டமா அதிபரிடம் கேட்டுள்ளோம். திங்கட்கிழமைக்குள் அந்த சட்ட ஆலோசனையைப் பெறுவோம்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here