சீனாவின் உடன்பாட்டில் கேள்விக்குறி.. ஒரே நம்பிக்கையையும் இழந்தது IMF..

1186

இலங்கையின் பிரதான கடனாளர்களில் ஒன்றான சீனா வழங்கிய இரண்டு வருட கால அவகாசம் இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு போதுமானதாக இல்லை என சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சீனா, இந்தியா உள்ளிட்ட இலங்கையின் கடனாளிகளின் பூரண உடன்பாட்டின் பின்னர் சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு 2.9 பில்லியன் டொலர் கடன் வசதிகளை வழங்கவுள்ளது.

இலங்கையின் கடனை மறுசீரமைக்க இந்தியா விருப்பம் தெரிவித்தாலும், கடனை திருப்பிச் செலுத்துவதற்கு சீனா இரண்டு வருட கால அவகாசம் வழங்கியுள்ளது.

இதேவேளை, இலங்கையின் கடனை செலுத்துவதற்கு 10 வருட கால அவகாசம் வழங்க பரிஸ் கிளப் சம்மதம் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here