தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடப்படவில்லை

305

தேர்தல் அல்லது தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடப்படவில்லை எனவும் தேர்தலை ஒத்திவைப்பதற்கான உத்திகளை கையாளுமாறு ஜனாதிபதி ஊடகப் பிரிவுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தவில்லை எனவும் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். எனது கருத்துப்படி, தேர்தலை ஒத்திவைக்கும் தந்திரோபாயங்களைப் பயன்படுத்துமாறு ஜனாதிபதி ஒருபோதும் ஜனாதிபதி ஊடகப் பிரிவிடம் கோரவில்லை. தேர்தல் நடந்தால் அதை எதிர்கொள்ள வேண்டும் என்று தனது கட்சிக்கும் மற்ற கட்சிகளுக்கும் அறிவுரை வழங்கியுள்ளார்.

இந்தத் தேர்தல் ஜனாதிபதித் தேர்தலுக்குப் பொருந்தாது. இது ஜனாதிபதியை நியமிப்பதற்கோ நீக்குவதற்கோ நடத்தப்படும் தேர்தல் அல்ல. பாராளுமன்ற தேர்தல் அல்ல. எனவே ஜனாதிபதியோ, பாராளுமன்றமோ மாறாத அந்த மாகாணத்தில் உள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக நடத்தப்பட்ட தேர்தல்தான் உள்ளூராட்சித் தேர்தல் எனத் தெரிவித்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here