கத்தோலிக்க திருச்சபை 75வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதில்லை

229

கத்தோலிக்க திருச்சபை 75வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதில்லை என கத்தோலிக்க திருச்சபையின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அருட்தந்தை இது தொடர்பில் தெரிவிக்கையில்;

“அந்நியக் கடன் தவணை கட்ட முடியாமல் பொருளாதாரத்தில் திவாலான நாட்டில், 30%க்கும் அதிகமான மக்கள் பட்டினி கிடக்கும் நாட்டில், ஊட்டச்சத்துக் குறைபாட்டால் அவதிப்படும் குழந்தைகள் உள்ள நாட்டில், வேலை இழக்கும் நாட்டில், தொழில்கள் வீழ்ச்சியடைந்து வரும் நாட்டில், சட்டத்தின் ஆட்சி சீர்குலைந்த நாட்டில், மனித உரிமைகள் மீறப்படும் நாட்டில், 200 மில்லியன் ரூபாய்க்கு மேல் செலவழித்து பெருமையாக கொண்டாட என்ன சுதந்திரம் என்று கேள்வி எழுப்புகிறோம். 24 மணி நேரமும் மின்சாரம் வழங்க முடியவில்லையா? இது மக்களுக்கு எதிரான பெரும் குற்றமும் வீண் விரயமும் ஆகும். சுதந்திர விழாவில் காரத்தினால்கள் பங்கேற்க மாட்டார்கள். எந்த கத்தோலிக்க தலைவரும் இதில் பங்கேற்க மாட்டார்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here