“இலவச பேருந்து – முச்சக்கர வண்டிகள் பாடசாலைகளுக்கு சுமையாகியுள்ளது”

1061

அரசியல்வாதிகளால் பாடசாலைகளுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட பஸ்கள் மற்றும் முச்சக்கரவண்டிகளை பராமரிப்பதற்கு பெற்றோரிடம் கட்டணம் வசூலிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளமையால் தாங்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகியுள்ளதாக அதிபர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் இந்த பஸ்களுக்கு டயர், சர்வீஸ், வருவாய் உரிமம், காப்புறுதி கட்டணம் ஆண்டுக்கு இரண்டு இலட்சத்துக்கும் அதிகமாக உள்ளதாகவும், அந்த தொகையை பெற்றுக் கொள்ள பிள்ளைகளிடம் இருந்து வசூலிக்கும் வசதி கட்டணத்தை உயர்த்தி தர வேண்டும் என்றும் கூறுகின்றனர்.

புத்தகங்கள் மற்றும் பாடசாலை உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு கூட பெற்றோர்கள் சிரமப்படுகின்ற இவ்வேளையில் பணத்தை வசூலிப்பது பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதாகவும் அதிபர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு வழங்கப்படும் பஸ்கள் கல்வி நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக அரசியல்வாதிகளின் கூட்டங்களுக்கு கட்சி உறுப்பினர்களை ஏற்றிச் செல்வதற்கும் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் பஸ்கள் காரணமாக இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்ட சந்தர்ப்பங்களில் பஸ்களை வழங்க மறுப்பது பிரச்சினைக்குரிய விடயம் எனவும் அதிபர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் ஹம்பாந்தோட்டை பிராந்திய கல்வி அலுவலகத்திடம் வினவிய போது, ​​பாடசாலைக்கு பஸ்கள் வழங்கப்படுவதற்கு முன்னர் அரசியல்வாதிகள் பாடசாலையின் பராமரிப்பு செலவுகளை ஏற்க முடியுமா என அதிபரிடம் கேட்டதாகவும் இதனால் பஸ்கள் மற்றும் முச்சக்கரவண்டிகள் வழங்கப்பட்டதாகவும் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.

அந்த பஸ்கள் மற்றும் முச்சக்கரவண்டிகளை அனுமதி பெற்று சந்திகளில் வாடகைக்கு அமர்த்திக்கொள்ள முடியும் என குறிப்பிட்ட அவர், எனினும் அவ்வாறு செய்வது அதிபர்களுக்கு கூடுதல் சுமையாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சில பாடசாலைகளுக்கு வழங்கப்பட்ட முச்சக்கரவண்டிகள் அதிபர் வீடுகளிலேயே வைக்கப்பட்டு இருப்பதும், சில முச்சக்கர வண்டிகள் பராமரிப்பு இன்றி பழுதடைந்து வருவதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், பாடசாலைகளுக்கு வழங்கப்பட்ட சில பஸ்கள், ஓராண்டுக்கும் மேலாக, எந்த தேவைக்கும் பயன்படுத்தப்படாமல், ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டிருப்பதும், சில பஸ்களை, தனியார் நிகழ்ச்சிகளுக்கு மட்டும், ஆசிரியர்கள் பயன்படுத்தியதும் தெரியவந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here