follow the truth

follow the truth

May, 9, 2025
Homeஉள்நாடுஅதிவேக நெடுஞ்சாலை பேருந்துகளுக்கான முற்கொடுப்பனவு அட்டைகள்

அதிவேக நெடுஞ்சாலை பேருந்துகளுக்கான முற்கொடுப்பனவு அட்டைகள்

Published on

காலிக்கும் மகும்புரவிற்கும் இடையில் இயங்கும் நெடுஞ்சாலை பஸ்களில் பயணிப்பதற்கு இன்று (02) முதல் முற்கொடுப்பனவு அட்டைகள் வழங்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிராண்டா தெரிவித்தார்.

கொட்டாவ, மகும்புர பல்வகை போக்குவரத்து நிலையத்திலிருந்து இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும், பின்னர் இதனை நாடளாவிய ரீதியில் பயன்படுத்தும் வகையில் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த அட்டைகளை மக்கள் வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கி ஆகியவற்றில் கொள்வனவு செய்ய முடியும் எனவும் நேற்று (பெப்.1) அரச வங்கிகளுடன் இந்த அட்டைகளை வழங்குவது தொடர்பில் உடன்பாடுகள் எட்டப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த முற்கொடுப்பனவு அட்டையை பொது மக்கள் அரச வங்கிகள் ஊடாக பெற்றுக்கொள்ள தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

முதற்கட்டமாக நெடுஞ்சாலைகளில் இயங்கும் பேருந்துகளுக்கு இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டு அதன் பின்னர் ரயில் சேவையிலும் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் பிரச்சார செலவு அறிக்கையை இம்மாத இறுதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு அமைவான தேர்தல் பிரச்சார வருமானம் மற்றும் செலவின அறிக்கைகளை எதிர்வரும் 27 ஆம் திகதி...

பெல் 212 ரக ஹெலிகொப்டர் நீர்த்தேக்கத்தில் வீழ்ந்து விபத்து – 2 விமானிகள் மீட்பு

இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர் ஒன்று இன்று காலை விபத்துக்குள்ளானது. ஹிங்குரக்கொட முகாமில் இருந்து...

கொட்டாவையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் மருத்துவமனையில்

கொட்டாவையில் மலபல்லா பகுதியில் உள்ள விகாரை ஒன்றுக்கு அருகில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த துப்பாக்கிச் சூட்டில்...