இங்கிலாந்தில் மாபெரும் வேலை நிறுத்தம்

671

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள சுமார் 300,000 ஆசிரியர் வல்லுநர்கள் அதிக சம்பளம் கோரி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

பல தசாப்தங்களில் பிரித்தானியாவில் இடம்பெற்ற மிகப்பெரிய வேலை நிறுத்தம் இதுவென வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்திருந்தன.

நேற்று (01) வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்பட்டது.

இதற்கு ஆதரவாக அந்நாட்டு அரச உத்தியோகத்தர்கள், புகையிரத, பஸ் சாரதிகள், பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

இதில் 120 அரசு நிறுவனங்களில் 100,000க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் 150 பல்கலைக்கழகங்களில் ஏராளமான ஆசிரியர்கள் உள்ளனர்.

இந்த வேலைநிறுத்தத்தால், நாட்டின் பாதி பாடசாலைகள் வழமையாக இயங்கவில்லை, மேலும் 5 சதவீத பாடசாலைகளை அதிகாரிகள் மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here