follow the truth

follow the truth

May, 17, 2024
Homeஉலகம்உக்ரைனுக்கு அதிநவீன ஆயுதங்களை வழங்க அமெரிக்கா ஒப்புதல்

உக்ரைனுக்கு அதிநவீன ஆயுதங்களை வழங்க அமெரிக்கா ஒப்புதல்

Published on

ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில் உக்ரைன் நாடு மீது தாக்குதல் நடத்திய ரஷ்யா அந்நாட்டின் பல பகுதிகளை பிடித்து கொண்டது.

ரஷ்யாவின் பிடியில் இருக்கும் பகுதிகளை மீட்க உக்ரைன் கடும் போர் புரிந்து வருகிறது. பல மாதங்கள் ஆன பின்பும் இன்னும் போர் முடிவுக்கு வரவில்லை. இந்த நிலையில் உக்ரைனுக்கு அமெரிக்கா ஆயுத உதவிகளை செய்து வருகிறது.

இதற்கிடையே அமெரிக்க அரசு உக்ரைனுக்கு 2.17 பில்லியன் அளவுக்கு ஆயுத உதவி வழங்க உள்ளதாக தெரிவித்து இருந்தது. இந்த உதவியின் போது தங்களுக்கு நீண்ட தூரம் சென்று தாக்கும் டாங்கிகள் மற்றும் ஏவுகணைகளை வழங்க வேண்டும் என உக்ரைன் கோரி இருந்தது.

முதலில் இதனை வழங்க தயக்கம் காட்டிய அமெரிக்கா இப்போது, அதி நவீன ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்க முன்வந்துள்ளது. ஏற்கனவே அறிவித்தபடி உக்ரைனுக்கு வழங்க உள்ள ஆயுதங்களில் நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகள், டாங்கிகள் ஆகியவற்றை வழங்க முன்வந்துள்ளது. இதன்மூலம் இனி ரஷியா மீதான உக்ரைன் தாக்குதல் மேலும் தீவிரம் அடையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

LATEST NEWS

MORE ARTICLES

ஜூன் 27 – செப்டம்பர் 10 ஆகிய நாட்கள் தீர்மானமிக்கவை

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நவம்பர் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் இரண்டு...

தென்னாப்பிரிக்கா மீது இஸ்ரேல் குற்றச்சாட்டு

ஐக்கிய நாடுகள் சபையின் உச்ச நீதிமன்றத்தில் இஸ்ரேலுக்கு எதிராக பக்கச்சார்பான மற்றும் தவறான குற்றச்சாட்டுகளை தென்னாப்பிரிக்கா கொண்டு வருவதாக...

தாய்வான் பாராளுமன்றத்தில் அடிதடி

தாய்வான் நாடாளுமன்ற சீர்திருத்தம் தொடர்பான விவாதத்தின் போது தாய்வான் பாராளுமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சீர்திருத்தங்கள் தொடர்பான கடுமையான சர்ச்சையின்...