கரு ஜயசூரியவுக்கு ‘ஸ்ரீலங்காபிமன்ய’ உயரிய தேசிய விருது

343

இலங்கையின் உயரிய தேசிய விருதான ‘ஸ்ரீலங்காபிமன்யா’ என்ற பட்டத்தை தேசபந்து கரு ஜயசூரியவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்கியுள்ளார்.

கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று(03) முற்பகல் ஜனாதிபதி விக்கிரமசிங்கவினால் கரு ஜயசூரியவிற்கு இந்த வாழ்நாள் முழுவதும் உயரிய விருது வழங்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

82 வயதான முன்னாள் சபாநாயகரும், தற்போதைய சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவருமான அவர், மதிப்புமிக்க விருதை பெறும் எட்டாமவராகும்.

1986 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச இந்த விருதை முதன் முதலில் பெற்றுக்கொண்ட அதேவேளை 2017 ஆம் ஆண்டு டபிள்யூ.டி.அமரதேவ இந்த விருதைப் பெற்றார்.

சர்வோதய இயக்கத்தின் ஸ்தாபகரான ஏ.டி.ஆரியரத்ன 2007 இல் ஸ்ரீலங்காபிமன்யா என்ற பட்டத்தைப் பெற்றவர்.

இலங்கைக்கு மிகச்சிறந்த மற்றும் சிறந்த சேவையை வழங்கியவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிடாமல் பொதுப் பதவியிலிருந்து விலகி சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தை முன்னெடுத்து வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here