follow the truth

follow the truth

May, 16, 2024
Homeஉள்நாடு75 ஆவது சுதந்திர தின நிகழ்ச்சி

75 ஆவது சுதந்திர தின நிகழ்ச்சி

Published on

இலங்கையின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கொழும்பு பிராந்தியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சுதந்திர தின நிகழ்வு அதன் தலைமையகம் தாருல் ஈமானில் மிக விமர்சையாக நடைபெற்றது.

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் பொதுச் செயலாளர் சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் ஸாலி அவர்களது தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கொழும்பு மாவட்ட பள்ளிவாயல்கள் சம்மேளனத் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி ஷிராஸ் நூர்தீன் அவர்களும், சிறப்பு அதிதிகளாக கொழும்பு ஹைரியா மகளிர் கல்லூரியின் அதிபர் திருமதி. நஸீரா ஹஸனார் அவர்களும், அல் ஹிஜ்ரா முஸ்லிம் வித்தியாலய அதிபர் திருமதி. A.F. ஸறூனா அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

கொளரவ அதிதிகளாக கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

தெரிவு செய்யப்பட்ட 50 ற்கும் அதிகமான மாணவ மாணவிகளுக்கு புத்தகங்கள் மற்றும் பாடசாலை உபகரணங்கள் கொள்வனவு செய்வதற்கான பணப் பரிசுச் சீட்டுகள் கையளிக்கப்பட்டன.

கொழும்புப் பிராந்திய ஜமாஅத்தே இஸ்லாமியின் பொறுப்பாளர் அஷ்ஷேய்க் ஸில்மி ஜுமான் (இஸ்லாஹி) மற்றும் கொழும்பு நகரக்கிளை பொறுப்பாளர் சகோதரர் அம்ஸுதீன் ஆகியோரது வழிகாட்டலுடன் கொழும்பு பிராந்திய உறுப்பினர்களது உதவியுடன் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

இந் நிகழ்வில் நலன் விரும்பிகள், ஜமாஅத்தின் உறுப்பினர்கள், பெண் ஊழியர்கள், நிர்வாகிகள், பாடசாலை மாணவ மாணவிகள், பெற்றோர்கள் கலந்து சிறப்பித்தனர்.

அஷ்ஷெய்க். மலிக் இஸ்லாஹி அவர்களினால் தொகுத்து வழங்கப்பட்ட இந்நிகழ்வு கொழும்பு நகரக் கிளைப் பொறுப்பாளர் சகோதரர் அம்ஸதீன் அவர்களின் நன்றியுரையுடன் இனிதே நிறைவுபெற்றது.

ஊடகப் பிரிவு
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி
கொழும்புப் பிராந்தியம்

No description available.

No description available.

No description available.

No description available.

No description available.

No description available.

No description available.

No description available.

No description available.

LATEST NEWS

MORE ARTICLES

மீண்டும் மீண்டும் ஒத்திவைக்கப்படும் இந்தியா – இலங்கை கப்பல் சேவை

இந்தியா - இலங்கை இடையிலான கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த 13 ஆம்...

இலங்கையர்கள் தொடர்பில் ஆராய விசேட தூதுக்குழு ரஷ்யாவிற்கு

ரஷ்ய – உக்ரைன் போரின் தொடர்புபட்டிருக்கும் இலங்கையர்கள் குறித்து ஆராய்வதற்காக விசேட தூதுக் குழுவொன்றை ரஷ்யாவிற்கு அனுப்புமாறு ஜனாதிபதி...

உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் இம்மாதத்திற்குள்

கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகளை இம்மாதத்திற்குள் வெளியிட முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்...