பொலிஸ் திணைக்களத்திற்கு ஜப்பானிய அரசாங்கத்தின் நன்கொடை

333

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பாவனைக்காக ஜப்பானிய அரசாங்கத்தினால் அன்பளிப்பு செய்யப்பட்ட 150 மோட்டார் சைக்கிள்கள், 74 வான்கள் மற்றும் மினி பஸ்கள் மற்றும் 115 கண்காணிப்பு உபகரணங்களும் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் அடையாளமாக கையளிக்கப்பட்டன.

வாகனங்களை அவதானித்த ஜனாதிபதி, ஜப்பானிய வெளிவிவகார இராஜாங்க அமைச்சருடன் சிநேகபூர்வ உரையாடலிலும் ஈடுபட்டார்.

இலங்கை பொலிஸாரால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளை இலகுபடுத்தும் வகையில் ஜப்பான் அரசாங்கம் இந்த நன்கொடையை வழங்கியுள்ளது.

இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிஷுகோஷி ஹிடேகி மற்றும் ஜப்பானிய தூதுக்குழுவினர், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் மற்றும் ஜனாதிபதியின் தலைமை அதிகாரி சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் சர்வதேச அலுவல்கள் பணிப்பாளர் தினுக் கொழும்புகே உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here