உக்ரைன் ஜனாதிபதியை கொல்ல மாட்டோம் என புடினிடம் இருந்து வாக்குறுதி

866

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கியை கொல்ல மாட்டேன் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உறுதியளித்ததாக இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் நஃப்தலி பென்னட் தெரிவித்துள்ளார். ரஷ்ய ஜனாதிபதியை சந்தித்த போது ஜெலன்ஸ்கியை கொல்ல திட்டமிட்டீர்களா என ரஷ்ய ஜனாதிபதியிடம் கேட்டதாக இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஜெலன்ஸ்கியைக் கொல்ல மாட்டேன் என்றும், அவரைக் கொல்லத் தேவையில்லை என்றும் இஸ்ரேல் முன்னாள் பிரதமர் நஃப்தலி பென்னட் இடம் தெரிவித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரஷ்ய ஜனாதிபதியுடனான கலந்துரையாடல் முடிந்த உடனேயே உக்ரைன் ஜனாதிபதியை அழைத்து புடின் உங்களை கொல்ல மாட்டார் என்று தெரிவித்ததாக நஃப்தலி பென்னட் கூறியுள்ளார்.

புடின் தன்னைக் கொல்ல மாட்டார் என்பதில் உறுதியாக உள்ளீர்களா என்று உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கேட்டதாகவும் இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் தெரிவித்தார்.

உக்ரைன் ஜனாதிபதியை கொல்ல ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் விரும்பவில்லை என்பதில் 100 சதவீதம் உறுதியாக இருப்பதாக இஸ்ரேல் முன்னாள் பிரதமர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா உக்ரைன் மீது படையெடுப்பைத் தொடங்கிய பின்னர் ஒரு சில சர்வதேச தலைவர்கள் மட்டுமே ஜனாதிபதி புட்டினுடன் உறவைப் பேணி வந்தனர். அவர்களில் இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் நஃப்தலி பென்னட் ஒருவர்.

ரஷ்ய-உக்ரைன் நெருக்கடியை அமைதியான முறையில் தீர்க்க மத்தியஸ்தர்களாக முன் வந்து ரஷ்யா சென்று புதினுடன் பேச்சுவார்த்தை நடத்திய சில தலைவர்களில் இஸ்ரேலின் முன்னாள் பிரதமரும் ஒருவர்.

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கியை கொல்ல சதி செய்ததாக ரஷ்யா மீது இதற்கு முன் பல முறை குற்றம் சாட்டப்பட்டது. எனினும் விளாடிமிர் புடின் பொய் சொல்வதில் வல்லவர் என உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here