follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுசரண குணவர்தனவுக்கு பிணை

சரண குணவர்தனவுக்கு பிணை

Published on

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பில் முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவிற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (07) பிணை வழங்கியுள்ளது.

இவர் தேசிய லொத்தர் சபையின் தலைவராக இருந்த போது அரசாங்க வாகனத்தை முறைகேடாக பயன்படுத்தி ஒரு கோடியே முப்பத்தாறு இலட்சத்து எண்பதாயிரம் ரூபாவை (13,680,000) மோசடி செய்ததாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தது.

01.08.2006 முதல் 2007 ஜூலை 31 வரையான காலப்பகுதியில் இந்த முறைகேடு இடம்பெற்றுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மேலும் குற்றம் சுமத்தியுள்ளது.

இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அங்கு குற்றஞ்சாட்டப்பட்ட சரண குணவர்தனவிடம் குற்றப்பத்திரிகைகள் கையளிக்கப்பட்டதுடன், அவரை 50,000 ரூபா ரொக்கப் பிணையிலும், தலா 5 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையிலும் விடுவிக்க உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

அத்துடன், பிரதிவாதிக்கு பயணத்தடை விதித்து வழக்கை மீண்டும் மே 04ஆம் திகதி அழைக்குமாறு உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

LATEST NEWS

MORE ARTICLES

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

கேகாலை - அவிசாவளை வீதியில் கொட்டபொல பகுதியில் இன்று (18) மாலை 4.00 மணியளவில் இரண்டு தனியார் பேருந்துகள்...

எல்ல – வெல்லவாய வீதிக்கு மீண்டும் பூட்டு

சீரற்ற காலநிலை காரணமாக எல்ல - வெல்லவாய வீதி இன்று (18) இரவு 08.00 மணி முதல் நாளை...

கடும் பனிமூட்டம் – சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

ஹபுத்தளை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று (18) முழுவதும் பனிமூட்டம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன. கொழும்பு – பதுளை வீதியில்...