நாங்கள் உண்மையிலேயே தயாராக உள்ளோமா?

2510

நவீன வரலாற்றில் மிகப்பெரிய இயற்கை பேரழிவாக இருக்கும் துருக்கி-சிரியா நிலநடுக்கத்தில் சுமார் 8,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

நூற்றுக்கணக்கான அடுக்குமாடி குடியிருப்புகள், கட்டிடங்கள் புதைந்துள்ள துருக்கியில், பூமிக்கு அடியில் புதையுண்ட உயிரை தேடி மக்கள் தங்கள் கைகளால் நிலத்தை தோண்டி வருகின்றனர்.

நிவாரணப் பணியாளர்கள் ஏற்கனவே பல நாடுகளில் இருந்து துருக்கியை அடைந்து வருகின்றனர்.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.5 முதல் 7.8 ஆக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இன்னும் ஆயிரக்கணக்கானோர் நிலத்தடியில் சிக்கியிருப்பதாக உதவி நிறுவனங்கள் மதிப்பிட்டுள்ளன.

இதேவேளை, துருக்கியில் காலநிலை மிகவும் குளிராக காணப்படுவதாகவும், அது மைனஸ் செல்சியஸ் (C-) ஆக பதிவாகியுள்ளது.

கட்டிடங்கள் இடிந்து விழுந்து உறக்கத்தில் இறந்த இலட்சக்கணக்கான மக்கள் பூமிக்கு அடியில் புதையுண்டவர்கள் பற்றிய விவரங்கள் எதுவும் இப்போதும் பதிவாகவில்லை. அவர்களில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளாக இருக்கலாம் என உதவிப் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இப்பகுதியின் புவியியல் நிலையை ஆராய்வதில் ஈடுபட்டுள்ள அமெரிக்க புவியியல் ஆய்வாளர்கள் இறந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 10,000 ஆக இருக்கலாம் என்று கூறுகின்றனர்.

பல துருக்கியர்கள் நாங்கள் எதிர்பார்த்து காத்திருந்த பேரழிவு என்று கூறுகிறார்கள்.

உண்மையில், எந்த நேரத்திலும் நம்மீது வரக்கூடிய இத்தகைய பாரிய பேரழிவுகளுக்கு மனித நாகரீகமாக நாம் இன்னும் தயாராக உள்ளோமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here