“இப்போதைய அரசியல் தலைமைகளில் ரணில் விக்கிரமசிங்க பரவாயில்லை”

492

இப்போதைய அரசியல் தலைமைகளில் ரணில் விக்கிரமசிங்க சிறந்தவர் என ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் முபாரக் அப்துல் மஜீத் DC Talks நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தெரிவித்திருந்தார்.

கேள்வி : சஜித் பிரேமதாச, மஹிந்த ராஜபக்ஷ, அநுர குமார திசாநாயக்க, ரணில் விக்கிரமசிங்க இவர்களில் யார் நல்லவர் என்று நினைக்கிறீர்கள்?

பொதுவாக அரசியல்வாதிகள் எல்லோருமே மோசம் தான், அதனை நன்றாக விளங்கிக் கொள்ள வேண்டும். எனினும் இப்போதுள்ள நிலையில் ரணில் விக்கிரமசிங்க பரவாயில்லை.

கேள்வி : அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இனது தலைவர் ரிஷாத் பதியுதீன் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹகீம், இவர்களில் சமூகத்திற்கான தலைவராக யாரை கூறுவீர்கள்?

சமூகத்திற்கான தலைவராக இந்த இரண்டு பேரையும் என்னால் கூற முடியாது. ஆனால் ரவுப் ஹகீமை விட ரிஷாத் பதியுதீன் நல்லவர்

கேள்வி : அப்படியென்றால் அடுத்தது ரிஷாத் பதியுதீன் உடன் தான் சேருவீர்கள் போல?

ரிஷாதுடன் தான் சேர்ந்து இருந்தோம், அதிலிருந்து விலகக் காரணம் 2013ம் ஆண்டு இடம்பெற்ற அளுத்கம கலவரம் தான் காரணம். அந்த நேரம் அந்தக் கலவரத்தினை அரசு தலையிட்டு நிறுத்தியிருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நான் இருந்தேன். அப்போது அமைச்சராக ரிஷாத் பதியுதீன் இருந்தார். அவருடன் நாங்கள் கட்சி ரீதியாக இணைந்து இருந்தோம். அப்போது எல்லாக் கட்சிகளும் அரசுடன் இருந்தனர். முஸ்லிம் காங்கிரஸ், ரிஷாத் பதியுதீன் கட்சி, அதாவுல்லாஹ் இனது கட்சி. இந்த மூன்று கட்சிகளும் அரசுக்கு முட்டுக் கொடுத்து இருந்தனர். அப்போது மிகவும் பிரபலமான கட்சியாக எமது உலமாக் கட்சி இருந்தது. இந்த நேரத்தில் கட்டாயம் அரசுக்கு எதிராக பேசித்தான் ஆகணும் என்று மஹிந்த அரசிலிருந்து விலகுவதாக நான் அறிக்கை விட்டேன். அவ்வாறு அறிக்கை விட்டதற்கு அப்புறம் மஹிந்தவுடன் இல்லை ஆனால் மஹிந்தவுடன் உள்ள அமைச்சரின் கட்சியில் இருப்பது நல்லதா என்று சமூகத்தில் கருத்துக்கள் எழலாம் என நினைத்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இலிருந்து நான் விலகினேன்..”

இதன் முழுமையான காணொளியினைக் காண; https://youtu.be/-2uYatbJCQ8

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here