follow the truth

follow the truth

May, 18, 2024
Homeஉள்நாடுமக்கள் கஷ்டப்படும் போது ஜனாதிபதி கனவுகளுக்குப் பின்னால் ஓடுகிறார்

மக்கள் கஷ்டப்படும் போது ஜனாதிபதி கனவுகளுக்குப் பின்னால் ஓடுகிறார்

Published on

ஜனாதிபதி தனது கனவுகளை நனவாக்கி அக்கிராசன உரை நிகழ்த்தும் போது கிராமங்களில் உள்ள மக்கள் சிரமங்களுக்கு முகம் கொடுப்பதாகவும், செய்கைகளுக்குத் தேவையான பூச்சிக்கொல்லிகளில் இருந்து, பாடசாலை மாணவர்கள் கற்கத் தேவையான பொருட்கள் இல்லை எனவும், மக்கள் இவ்வாறு மிகவும் நிர்க்கதிக்காளாகிவிட்ட வேளையில் உலகிற்கு கடனாளியாக இருந்து கொண்டு, சுதந்திர தினத்தன்று நடமாடும் கழிவறைகளுக்காக 142 இலட்சம் செலவிடப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அக்கிராசன உரை நிகழ்த்துவதால் மட்டும் நாட்டின் பிரச்சினைகள் தீர்ந்துவிடாது எனவும், யானை மொட்டு அரசாங்கம் வீட்டுக்குச் செல்லும் போது இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் எனவும், மக்கள்படும் துன்பம் அவர்களுக்குப் புரிவதில்லை எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், சாதாரண மனிதனதும் துன்பத்தைப் புரிந்து கொள்ளும், மனித நேயம் மேலோங்கும் ஆட்சியொன்றின் யுகம் தான் இப்போது நாட்டிற்குத் தேவை எனவும் தெரிவித்தார்.

ஒரு புறம் கேஸ் விலை உயரும் போது, ​​மறுபுறம் மின் கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளதாகவும், மக்களுக்கு பாதகங்களை விளைவிக்கும் இந்த சீரற்ற அரசை ஒழிக்க ஒன்றிணைவோம் எனவும், தற்போது நாட்டிற்கு ஏற்றுமதியை மையமாகக் கொண்ட, உற்பத்தியை மையமாகக் கொண்ட, டிஜிட்டல் பொருளாதாரமொன்றே தேவை எனவும், நவீன தொழில்நுட்பத்தின் மூலம் பாரிய விவசாயப் புரட்சியை ஏற்படுத்த ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொள்ளுமாறு எதிர்க்கட்சித் தலைவர் வேண்டுகோள் விடுத்தார்.

நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்த ராஜபக்ச குடும்பம் மீண்டும் யானையின் போர்வையில் ஆட்சியைப் பிடிக்க முயற்சிப்பதாகவும், இனிமேல் பதவியேற்கும் மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் அரசியலை விடுத்து தேச சேவையை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இது நாட்டுக்கு நல்லது எனவும் எதிர்க்கட்சித்தலைவர் மேலும் தெரிவித்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

கேகாலை - அவிசாவளை வீதியில் கொட்டபொல பகுதியில் இன்று (18) மாலை 4.00 மணியளவில் இரண்டு தனியார் பேருந்துகள்...

எல்ல – வெல்லவாய வீதிக்கு மீண்டும் பூட்டு

சீரற்ற காலநிலை காரணமாக எல்ல - வெல்லவாய வீதி இன்று (18) இரவு 08.00 மணி முதல் நாளை...

கடும் பனிமூட்டம் – சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

ஹபுத்தளை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று (18) முழுவதும் பனிமூட்டம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன. கொழும்பு – பதுளை வீதியில்...