“IMF உதவி கிடைத்ததும் பொருட்களின் விலை குறையும்”

1519

சர்வதேச நாணய நிதியத்தின் முதல் தவணை கடனுதவியை இலங்கைக்கு விரைவில் பெற்றுக்கொடுக்கும் எனவும், பணம் கிடைத்தவுடன் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

நாவலப்பிட்டி மாநகர சபையில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் நேற்று (11) நாவலப்பிட்டி நகரசபையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பிலேயே மஹிந்தானந்த அளுத்கமகே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த மஹிந்தானந்த அளுத்கமகே, நாவலப்பிட்டி நகர சபைக்கு ஐக்கிய தேசிய கட்சி மற்றும் பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் முன்வைக்கப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் மார்ச் மாதம் 10ஆம் திகதி நாவலப்பிட்டி நகர சபையை அந்த வேட்பாளர்கள் கைப்பற்றுவார்கள் என மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

பல வருடங்களாக மின்கட்டணம் அதிகரிக்கப்படாததால், மின்சார உற்பத்திக்குத் தேவையான எரிபொருளைப் பெறுவதற்காகவே மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டதாகவும், நாடு முழுவதும் உள்ள நுகர்வோருக்கு போதுமான எரிபொருள் மற்றும் எரிவாயுவை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சித் தேர்தலின் மூலம் அரசாங்கத்தை மாற்ற முடியாது எனவும், தற்போதைய அரசாங்கம் இன்னும் 2 1/2 வருடங்கள் ஆட்சியில் இருக்கும் எனவும், அதன் போது தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைந்துள்ளதாகவும், இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் நாட்டு மக்களின் வாழ்க்கைச் செலவு குறையும் என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here