உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இன்று (13) பிரன்ட் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை 85.65 டொலர்களாகவும், வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 78.99 டாலராகவும் இருந்தது.
அமெரிக்காவில் பணவீக்கத்தை கட்டுப்படுத்த அந்நாட்டு மத்திய வங்கி அதிகாரிகள் வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ள பின்னணியில் தேவை குறைந்துள்ளதால் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.