follow the truth

follow the truth

May, 19, 2025
Homeஉலகம்12 வயது சிறுமியை கற்பழித்து சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிய 39 வயது ஆசிரியர்

12 வயது சிறுமியை கற்பழித்து சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிய 39 வயது ஆசிரியர்

Published on

சம்பவம் என்ன?

2018 ஆம் ஆண்டு இந்தியாவின் வடக்கு பீகாரில் உள்ள 39 வயதான நீரஜ் மோடி என்ற அரசாங்க பாடசாலை ஆசிரியர் ஒருவர் அவரிடம் கல்வி கற்ற 12 வயது சிறுமி ஒருவரை கற்பழித்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.

கரும்புத்தோட்டம் ஒன்றில் வைத்து அந்த சிறுமியை குறித்த நபர் கற்பழித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்தோடு அதனை வீடியோ எடுத்து சம்பவத்தை வெளியில் கூறினால் அதனை இணையத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டியதாகவும் கூறப்படுகின்றது.

எவ்வாறாயினும் குறித்த சிறுமியின் தாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்த நிலையில் 39 வயதான நீரஜ் மோடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். ஆனால் துரதிஷ்டவசமாக வெறும் இரண்டு மாதங்களில் நீதிமன்றத்தினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

அதன் பின்னர் பொலிசார் நீரஜ் மோடி மீது பாலியல் வழக்கொன்றை பதிவு செய்தனர். அந்த வழக்கும் பல கட்டங்களாக விசாரிக்கப்பட்டு வந்தன.

நீரஜ் மோடி மற்றும் அவரது தந்தை போட்ட நாடகம் என்ன?

இந்தியாவின் பரிசுத்த நதிக்கு அருகாமையில் உள்ள சுடுகாட்டில் திடீரென இரண்டு நபர்கள் வந்து ஒரு இறுதிக்கிரியையை மேற்கொள்ள ஏற்பாடுகளை செய்கின்றனர். அவர் இந்து மத அடிப்படையில் அந்த இறுதிக்கிரியைக்கு தயாராகி வருகின்றார்.

ஆனால் விசித்திரம் அந்த இறுதிக்கிரியைக்கு யாருடைய உயிரிழந்த உடலும் கொண்டுவரப்படவில்லை. அங்கே வந்திருந்தது கற்பழிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 39 வயது நீரஜ் மற்றும் அவரது 64 வயதான தந்தை என்று கூறப்படுகின்றது.

39 வயதான நீரஜ் மோடி தன்னை தானே ஒரு வெள்ளைத்துணியால் சுற்றி இறந்தவர் போன்று படுக்க அவரது தந்தையும் அவர் மேல் விறகுகளை அடுக்கியுள்ளார். அவருடைய முகம் மட்டுமே இறுதியாக தெரிந்துள்ளது.

இதனை புகைப்பட எடுக்க நபர் இருந்தார் என்றும் கூறப்படுகின்றது. இல்லை என்றும் கூறப்படுகின்றது. அதில் சரியான தெளிவு இல்லை. எவ்வாறாயினும் இரண்டு புகைப்படங்களை எடுத்துள்ளார்.

அதன் பின்னர் நீரஜின் தந்தை இந்த புகைப்படங்களுடன் வழக்கறிஞர் மூலமாக நீதிமன்றத்தை நாடி கிராமப்புறத்தில் இருக்கின்ற தனது மகன் தனது வீட்டிலேயே இறந்துவிட்டார் என்று அறிவித்துள்ளார்.

அதற்கான ஆதாரங்களாக அந்த புகைப்படங்களை காட்டவே நீதிமன்றமும் அதனை ஏற்றுக்கொண்டுள்ளது. அதனால் இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வருவதாக அறிவித்தும் உள்ளது.

இந்த விவகாரம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான சட்டத்தரணி குறித்த விடயத்தை சிறுமியின் தாயிடம் கூறியுள்ளார்.

நீரஜ் உயிரிழந்துவிட்டார் என்பதை சந்தேகக் கண்கொண்டு பார்த்த ஒரே நபர் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய்.

ஒருவர் உயிரிழந்தால் அந்த ஊருக்கே தெரியும். உற்றார் உறவினர்களுக்குத் தெரியும். இறுதிக்கிரியைகளில் மக்கள் ஒன்று சேர்வார்கள். இதில் ஒன்றுமே நடக்கவில்லை என சந்தேகம் கொண்ட தாய் மீண்டும் விசாரிக்க வேண்டும் என் வேண்டுகோள் விடுக்க அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகின்றது.

அவ்வாறு விசாரணைக்கு வந்த பொழுதே பல திடுக்கிடும் உண்மைகள் வெளியில் வந்துள்ளன. இறந்ததாக புகைப்படம் எடுத்து அதனை வைத்து நீதிமன்றத்தை ஏமாற்றியுள்ளனர். இது தவிர பொய்யான மரண சான்றிதழை பெற்றுக்கொள்ள 5 பெற்றோர்களின் விபரங்களை அவர்களின் அனுமதியின்றி பயன்படுத்தியுள்ளனர். அதற்காக பொய்யான கையெழுத்துக்களையும் இட்டுள்ளனர்.

இது தவிர சட்டத்தை ஏமாற்றியுள்ளனர். இதனால் கடந்த வருடம் மே 23 ஆம் திகதி நீரஜின் தந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

தான் இறந்துவிட்டதாக கூறி சுமார் 9 மாதங்களின் பின்னர் நீரஜ் மீண்டும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவர் குற்றவாளி என உறுதி செய்யப்பட்ட நிலையில் 14 வருடங்கள் அவருக்கு சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முயன்ற மகனும் அவரை காப்பாற்ற முயன்ற தந்தையும் என இருவரும் இப்பொழுது சிறையில் உள்ளனர்.

“என் மகளுக்கு தொல்லை கொடுத்தவருக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்று மூன்று வருடங்களுக்கு மேலாக போராடி வந்தேன். ஒருநாள், அவர் இறந்துவிட்டார் என்று எனது வழக்கறிஞர் என்னிடம் கூறினார். ஒரு மனிதன் எப்படி அப்படி இறக்க முடியும் என்ற சந்தேகம் எனக்கு வந்தது..”

“பொய் மரணம் என்று நிருபிக்க புதிய வழக்கை தாக்கல் செய்ய அதிக பணம் செலவாகும் என்று வழக்கறிஞர் என்னிடம் சொன்னார், நான் கவலைப்படவில்லை, நான் பணத்தை தயார் செய்வேன் என்று சொன்னேன், நான் பயப்படவில்லை, வழக்கறிஞர்கள் மற்றும் அதிகாரிகளிடம் உண்மையைக் கண்டறியச் சொன்னேன்.”

“உண்மையை கண்டறிய தொடர்ந்தும் நான் அழுத்தம் கொடுத்து வந்தேன். என் மக்களை அசுத்தப்படுத்திய அந்த குற்றவாளி சிறைக்குச் சென்றதில் மிக்க மகிழ்ச்சி.”

“ஆனால் என் மகளின் வாழ்க்கை கலங்கமாகிவிட்டது. அவளுக்கு என்ன நடக்கும்?” இதுதான் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயின் இறுதியான வார்த்தைகள்.

சம்பவத்துக்கு காரணம் என்ன?

பொதுவாக இந்தியாவின் பின்னணி கிராமங்களில் வசிக்கும் மக்கள் தங்களின் கழிவறை தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள காடுகளையும் மேடுகளையுமே நாடுகின்றனர்.

தற்போதைய பிரதமர் நரேந்திரத மோடி சகல வீடுகளுக்கும் கழிவறை வசதி என்ற ஒரு திட்டத்தை அறிவித்தார். ஆனால் அந்த திட்டம் முழுமையாக எங்கும் நடக்கவில்லை.

அப்படித்தான் இந்த பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டுப்பக்கத்திலும் எந்த கழிப்பறை வசதிகளும் சரியாக இல்லை. கழிப்பறை தேவைக்காக குறித்த சிறுமி தனியாக கரும்புத் தோட்டத்துக்கு சென்ற பொழுதுதான் அந்த 39 வயதான அரசாங்க பாடசாலை ஆசிரியர் இந்த சிறுமியை கற்பழித்துள்ளார்.

எவ்வாறாயினும் சட்டம் தன் கடமையை செய்ததில் மக்களுக்கு மகிழ்ச்சி.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் ‘டிராவல் வித் ஜோ’ யூடியூபர் கைது

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக அரியானாவை சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரியானாவை...

நியூயார்க் பாலம் மீது மோதிய மெக்சிகோ கப்பல் – இருவர் பலி

மெக்சிகோ கடற்படைக் கப்பல் புரூக்ளின் பாலத்தில் மோதி விபத்திர்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும்,19 பேர் காயமடைந்துள்ளனர். நியூயார்க் நகரின்...

பலஸ்தீனியர்களை லிபியாவுக்கு இடமாற்றம் செய்ய அமெரிக்கா திட்டமா?

பலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேலுக்கு புகுந்து...